அமலா ‘ராஜ்’

*கோவையில் ஏன் இந்த கொடூர கலவரம்:*

நேரடி ஐபிஎஸ்.அதிகாரியாக இருந்தும் கலவரத்தை ஏன் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை?

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அமைதிப்பூங்காவாக இருந்த கோவை
நகரம் இன்று கலவர பூமியாக மாறியதற்கு நிஜ காரணிகள் என்ன?

1. இந்து -முஸ்லீம் அமைப்புகளை ஒரு சேர கண்காணித்து, அதன் தலைவர்களை தனித்தனியாக அழைத்துப் பேசுவது இதுவரை இருந்த போலீஸ் கமிஷனர்களின்
பண்பு. இதை தூர தூக்கிப் போட்டுவிட்டார். சமீபத்தில் கூட முஸ்லிம் பிரமுகர்கள் போலீஸ் கமிஷன்ரை சந்திக்க வந்த போது, ‘’நான் ஒரே பிசி… போய் ஏ.சி. ஐ.எஸ்.சை பார்க்கச் சொல்லுங்க” என்று விரட்டி இருக்கிறார். இந்து அமைப்புகளும் இதே கதிதான்.

2. அப்படியென்ன அவர் பிசி. வேறு ஒன்றுமில்லை. டிஸ்புயூட் சொத்து குறித்த விவரங்களை தனது புரோக்கர் வில்லங்கம் வீராசாமி என்ற அக்குயுஸ்ட் மூலம் சேகரித்து, அதில் தலையிட்டு பணத்தை சம்பாரிப்பதற்கே இந்த போலீஸ் கமிஷன்ர் அமல்ராஜ் ஐபிஎஸ்க்கு நேரம் போதவில்லை.

3. ரியஸ் எஸ்டேட் தொழிலில் காட்டும் ஆர்வத்தில், கோவை நகர நிர்வாகத்தில் காட்டுகிறாரா அமல்ராஜ்.

அவர் என்ன செய்கிறார். இதோ உதாரணங்கள்:

அ) கோவை ஒப்பணக்கார வீதியில் இருக்கும் இடத்தை அனுபவித்து வரும் தாய், மகன்(கை, கால் இயங்காது) மகள்(விதவை) ஆகியோரிடம் இருந்து புரோக்கர் வில்லங்கம் வீராசாமி ஒப்பந்தம் போடுகிறார். அவர்களை வீராசாமி ஏமாற்றியதால், அவர் மீது விதவை மகள் (45 வயது) புகார் கொடுக்கிறார். அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வீராசாமியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இதன் பிறகு, போலீஸ் கமிஷனராக சேர்ந்த அமலா ராஜ்( ஆம் அவர் பெண் போலீஸார் அப்படித்தான் அழைக்கிறார்கள். காரணம், வேறு என்ன ஜொள்ளுவிடுவதுதான்)
அந்த வழக்கை ரீ ஓப்பன் செய்து, புகார் கொடுத்த விதவை மகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார். அங்கே மிகப்பெரிய கட்டடம் கட்டப்ப்டுகிறது.
தற்போது அந்த இடம், மிகப்பெரிய ஜவுளி கம்பெனிக்கு விற்கப்படுகிறது. சென்னை, நெல்லை, மதுரை, நாகர்கோவிலில்(சமீபத்தில்) கோலோச்சும் துணிக்கடைதான் அந்த கட்டடத்தை வாங்கியது.
இந்த டீலில் அமலா ராஜூக்கு கைமாறிய தொகை 2.5 கோடி ரூபாய்.

(நிருபர்கள் நேரில் விசாரித்தால், இன்னும் பல சுவாரஸ்யங்கள் கிடைக்கலாம்)

ஆ).கோவையின் மிகப்பெரிய ஜவுளிக்கடை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ். இந்த குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க வந்த புகாரில் அமலாராஜ் அடைந்த லாபம் 3 கோடி ரூபாய். இத்தனைக்கும் இந்த ஐவுளி நிறுவனத்தின் உறவினர்தான், கோவை நகரின் ஐ.எஸ். ஏ.சி. (நிருபர்கள் ஆழமாக விசாரித்தால், இரண்டு தொடர் எழுதும் அளவுக்கு செய்திகள் இருக்கிறது)

இ) . ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் ரெசிடென்சி ஓட்டலுக்கு சொந்தமான நில விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கிறார் டேவிட் கிளமெண்ட் என்ற மோசடி பேர்வழி கொடுத்த புகாரின் பேரில். இந்த புகாரை டேவிட் கிளமெண்ட் பல முறை கொடுத்து மூக்கறுப்பட்டவர். இதில் லாபம் பார்க்க ஆசைப்படுகிறார் அமலாராஜ்.

ஈ). கோவை காஸ்மோபாலிட்டன் கிளப்பில், அதன் நிர்வாக டிரஸ்டி கோபாலகிருஷ்ணன் (பி.எஸ்.ஜி.. குரூப்) மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது புகார் இருக்கிறது. அந்த வழக்கை மூட, கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஏகப்பட்ட ஆதாயம் பெற்றுக்கொண்டிருக்கிறார். காஸ்மோபாலிட்டன் கிளப் கட்டடத்தில் ஓ.எஸ்.ஆர். இடம் ஒதுக்க வேண்டும். அதை போர்ஜ் செய்து, மோசடி செய்துவிட்டதாக கோபாலகிருஷ்ணன் மீது புகார் சுமத்தி இருக்கிறார்கள் கிளப் உறுப்பினர்கள்.
இந்த மோசடியை மறைத்து, அந்த புகாரை குளோஸ் செய்து, அவரைத்தான் இன்று கோவை பெருநகர போலீஸ் கமிஷனரின் ஆலோசகராக நியமித்திருக்கிறார் அமலா ராஜ்.
(இதை போலீஸ் கமிஷனர் அலுவலக ஊழியர்கள், டிரைவர்கள், சக அதிகாரிகளிடம் நிருபர்கள் விசாரித்தாலே போதும். மேலும் விவரம் வேண்டும் என்றால், காஸ்மோபாலிட்டன் கிளப்பிலும் விசாரிக்கலாம்)

உ) . ப்ரூக் பீல்டு மால் சாலை ஏன் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அதற்கு கைமாறிய தொகை எவ்வளவு?

ஊ) . கோவை- திருச்சி சாலையில் டி.வி.எச். நிறுவனத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்களுக்காக பணம் கட்டியவர்கள் இன்னும் தங்களுக்கு வீடு கொடுக்கவில்லை என்று தர்ணா செய்தால், அவர்களை லட்டி சார்ஜ் செய்து, சிறையில் அடைத்தது ஏன்? இதற்கு தி.மு.க.வின் மாஜி அமைச்சர் நேருவின் தம்பி ரவி மற்றும் மணி வண்ணனிடம் பெற்ற தொகை எவ்வளவு?

ஏ) வெளியூர்களில் குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருக்கும் நில மோசடி தொடர்பாக கோவையில் எப்.ஐ.ஆர். போட்டுத்தரும்படி சி.சி.பி.க்கு உத்தரவிடுகிறார் அமலாராஜ். பிறகு, அதை அந்தந்த ஊர்களுக்கு டிரான்ஸ்பர் செய்தும் தருகிறார்.
இந்த வித்தைக்கு என்ன பெயர்? எம்புட்டு துட்டு கைமாறுகிறது?

ஐ) . இவரது வீட்டை 25 லட்சம் ரூபாயில் சீரமைத்து இருக்கிறார். அது கவர்மெண்ட் பங்களா தான். அதில் என்ன செலவு செய்திருக்கிறார் என்று நிருபர்களும், சமூக ஆர்வலர்களும் தயவு செய்து, அந்த பங்களாவுக்குள் நேரடியாக சென்று பார்வையிடுங்கள். அப்போதுதான் உண்மை தெரியும். மேலும், போலீஸ் கமிஷனர் பங்களாவில் (2 ஏக்கர் இருக்கும்) இருக்கும் 300 மரங்களை ஏன் வெட்டி விற்றுவிட்டார். போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இருக்கும் 100 மரங்களை ஏன் வெட்டி விற்றுவிட்டார். இதையெல்லாம் தட்டிக்கேட்க, யாரும் இல்லை.
உள்துறை செயலர் இவரை கேட்க முடியவில்லை…
டி.ஜி.பி. இவரை தட்டி கேட்க முடியவில்லை…
கேட்டால், எல்லாரையும் நான் கவனித்துக்கொள்கிறேன் என்று மீசை முறுக்கி
திமிர்பேச்சு!

ஒ). லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்…. அழகான பெண் போலீசை கண்டால், கண்டதுமே காமுற்று பேசும் பேச்சு… பெரிய போலீஸ் அதிகாரி.,, ஐ.ஜி அந்தஸ்து அதிகாரி…. நேரடி ஐபிஎஸ். அதிகாரி என்ற திமிரில், ‘’வந்து என் அலுவலகத்தில் இருந்துவிடேன்” என்று கொஞ்சுவதும் கெஞ்சுவதும் அமலாராஜூக்கு புதிது இல்லை..

—-இப்படிப்பட்ட போலீஸ் கமிஷனர் இருந்தால், கோவையில் ஏன் இந்து முஸ்லிம் கலவரம் வெடிக்காது. சட்டம் -ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமலாராஜ், சம்பாதிப்பதிலும், ஜொள்ளூவிடுவதிலும் காலத்தை போக்கினால்…கோவை சட்டம்-ஒழுங்கை எப்படி காப்பாற்றுவது.

ஒரு இந்து முன்னணி பிரமுகர் படுகொலை செய்ய்ப்பட்டார். மறுநாள் கலவரம் வெடிக்கும் என்று இங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகள் காட்டு கத்து கத்துகிரோம்.
’’எல்லாம் எனக்கு தெரியும்” என்று இறுமாப்பில், கலவரத்தை தடுக்க தவறிவிட்டார்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் கோவையை அமைதிப்பூங்காவாக வைத்திருந்தோம். அதுவும் 2006- 2011 தி.மு.க. ஆட்சியில் கூட கலவரம் ஏற்படாமல் கட்டுக்குள் வைத்திருந்தோம்.
அதை தகர்த்துவிட்டார் இந்த அமலாராஜ்.

இதையெல்லாம் டி.ஜி.பி. உள்துறை செயலருக்கு புகார் அனுப்பியாகிவிட்டது. ஆனாலும், நடவடிக்கை இல்லை.

இவை எதுவும் இட்டுக்கட்டிய கதை அல்ல. நிஜம்.
நிருபர்கள் விசாரிக்கட்டும். உண்மை நாட்டு மக்களுக்கு தெரியட்டும்

நன்றி!
*கோவை நகர காவலர் சங்கம்*

This entry was posted in Cinema News. Bookmark the permalink.

Comments are closed.